தனிமைப்படுத்தப்பட்ட நாட்டின் முக்கிய பிரதேசங்கள்

 எதிர்வரும் திங்கட் கிழமை (16) காலை 05 மணி முதல் கொழும்பு – கோட்டை, புறக்கோட்டை, மருதானை, டேம் வீதி, கொம்பனி வீதி, களனி பொலிஸ் பிரிவு ஆகிய இடங்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், கம்பஹா மாவட்டத்தில் நீர்க்கொழும்பு, ஜா-எல, கடவத்தை, ராகம மற்றும் பேலியகொடை பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய பகுதிகள் இன்று காலை 05 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து இன்று (15) காலை 05 மணிக்கு விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.



0/Post a Comment/Comments