வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக, எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ அனுமதி வழங்கவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே இலங்கைக்கு அல்லது வேறு எந்தவொரு இரண்டாவது நாட்டுக்குள் நுழைய அல்லது வெளியேற அனுமதி வழங்குவதற்காக எந்தவொரு விதத்திலும் எந்தவொரு நிதிக்கட்டணத்தையும் கோரும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அமைச்சு இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடு, அதிகம் அவதானமிக்க மற்றும் தகுதியுடையவர்களுக்கு முன்னுரிமையளித்து, நாளை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக