கல்வி நடவடிக்கைகளை வீட்டில் இருந்தவாறே தொடரும் வகையில், கல்வி அமைச்சினால் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ள குருகுலம் தொலைக்காட்சி சேவைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் இந்த தொலைக்காட்சி சேவை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
நாளை அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்த கல்வி சேவைக்கான நேர அட்டவணை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை பட்டியலிடப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 வரை இந்த கல்வி சேவை ஒளிபரப்பாகும் என கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.
3ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையான வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தொலைக்காட்சி ஊடாக இந்த கல்வி நடவடிக்கைகள் தொடரப்படவுள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் வீட்டில் இருந்தவாறே கல்வி நடவடிக்கைகளை தொடர முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இப் பாடத் தொடரிற்காக தொலைக்காட்சியினூடாக தொடர்புகொள்ளமுடியாத மாணவர்களுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக இதனைத் தொடர இருப்பதுடன், பாடத்தொடரின் வேளையில் ஏற்படுகின்ற சிக்கல்களை ஆசிரிய குழாம் ஒன்றிற்கு முன்வைப்பதற்கும் 1377 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தினை கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான நேர அட்டவணையொன்றும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
Click to download timetable pdf file
(அரச தகவல் திணைக்களம்)
கருத்துரையிடுக