(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டை மேலும் அராஜக நிலைக்கு ஆளாக்காமல் எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து தேரர்களையும் கொழும்புக்கு அழைத்து வந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தேரர் அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
தேரர்கள் அமைப்புக்களின் ஒன்றியத்தின் 11தேரர்கள் கைச்சாத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டை தொடர்ந்து அராஜக நிலைக்கு கொண்டு செல்லாமல் எதிர்வரும் 7ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும். அவ்வாறு விலகாவிட்டால், நாட்டில் இருக்கும் அனைத்து தேரர்களையும் கொழும்புக்கு அழைத்து வந்து 7ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து பாரிய போராட்டத்தை மேற்கொள்வோம்.
நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினை மற்றும் அராஜக நிலைமையை சீர் செய்வதற்கு உடனடியாக செயற்படுமாறு மகாநாயக்க தேரர்கள் கூட்டாக கைச்சாத்திட்டு அனுப்பிய கடிதத்துக்கு ஆரோக்கியமான பதிலொன்றை அரசாங்கங்கம் தெரிவிக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
-நன்றி சார்ட் நியூஸ்-
கருத்துரையிடுக